சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்


சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
x

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து புத்துக்கோவில் செல்லும் சாலையில் பெரிய கம்பியம்பட்டு அருகே உள்ள சாலையில் தினமும் தண்ணீர் செல்வதால் தார் சாலை பாசி பிடித்து வழுக்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் வழுக்கி விழும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் செல்லும் தண்ணீரை தடுக்கும் வகையில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story