குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி


குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி சந்தப்படுகை கிராமத்தில் பூமிக்கு அடியில் குடிநீர் செல்லும் குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சந்தப்படுகை மற்றும் திட்டுபடுகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் இருந்து வந்தது. தகவல் அறிந்ததும் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து நேற்று பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு உடைந்த குழாய்கள் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய குழாய் பொருத்தப்பட்டு தொடர்ந்து தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story