தண்ணீர் பந்தல் திறப்பு விழா
பர்கூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி
பர்கூர்
பர்கூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. முன்னதாக எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தண்ணீர் பந்தலை மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், முன்னாள் எம்,எல்,ஏ, ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினா். இதில் நகர செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தூயமணி, மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட தகவல் நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திகேயன், நகர பேரவை துணை செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பழனி சரவணன், முன்னாள் நகர செயலாளர் ஜெயராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story