குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இன்னும் பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக அவினாசி ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக குழாய் உடைப்பு சரி செய்யப்படாத இடங்களும் உண்டு. இந்த நிலையில் அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் நடுரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. அங்கு குடிநீர் ஊற்றாக பெருக்கெடுத்து, சாலை முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. மாநகரின் பிரதான சாலையான அவினாசி சாலையில் முக்கிய சந்திப்பில் குழாய் உடைந்து பலமணி நேரம் குடிநீர் வீணாகி வருவதை அந்த வழியாக அனைத்து துறை அதிகாரிகள் பார்த்தும், அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது பெரும் பொதுமக்களை கடும் அதிருப்திகுள்ளாகி உள்ளது.
---