வட்டமலைகரை ஓடை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்


வட்டமலைகரை ஓடை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்
x

வட்டமலைகரை ஓடை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளது. இந்த அணை 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த அணை மூலம் வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 43 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணைக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் முறையாக அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு 2-ம் முறையாக மே மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது 3-வது முறையாக விவசாய பாசனத்திற்கு மற்றும் குடிநீருக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வட்டமலைக்கரை ஓடை அணை நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சி.பாலபூபதி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் லோகநாதன் மற்றும் பாசன சபை நிர்வாகிகள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் மனுவை கொடுத்தனர்.



Next Story