நீர்வளத்துறைஆய்வு கூட்டம்
மண்டலஅளவிலான நீர்வளத்துறைஆய்வு கூட்டம்- அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு
தென்காசி
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று (வியாழக்கிழமை) முதல் 2 நாட்கள் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.
மதியம் 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறையின் மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
இரவில் நெல்லையில் தங்கும் அமைச்சர் துரைமுருகன், நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தாமிரபரணி-கருமேனியாறு நதி நீர் இணைப்பு பணிகளை பொன்னாக்குடி பகுதியில் ஆய்வு செய்கிறார்.
Related Tags :
Next Story