படந்தால் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு
படந்தால் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
தாயில்பட்டி,
சாத்தூர் அருகே உள்ள படந்தால் ஊராட்சியை சேர்ந்த வசந்தம் நகர், முனிசாமி கோவில் தெரு, தென்றல் நகர், மருதுபாண்டியர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். படந்தால் ஊராட்சியின் குடிநீர் தேவைக்காக வைப்பாற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு பைப்லைன் மூலம் மேல்நிலைதொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குறைந்த அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் இப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். குடிநீர் தட்டுப்பாடினால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால் மேற்கண்ட பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.