பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நாகையில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நாகையில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
மே தின விழா
நாகை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், மின்சார வாரிய அலுவலகம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நேற்று மே தின விழா நடந்தது.
அரசு போக்குவரத்து கழக பணிமனையில், வேதாரண்யம் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியன் தொழிற்சங்க பேரவை கொடியை ஏற்றி வைத்து, அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலையும் திறந்து வைத்து பழங்கள் மற்றும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக விவசாயிகள் மராமத்து பணி செய்வதில் சிரமம் உள்ளது. இதை போக்குவதற்கு விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
பாசனத்திற்கு தண்ணீர்
வருகிற ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். மேலும் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கொடி ஏற்றி வைத்தார்.