மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் - சசிகலா


மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் - சசிகலா
x

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக அரசு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பதை கடந்த 28-ந்தேதியன்று நிறுத்திவிட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தாளடி பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூரிலும் 104 அடிகளுக்கு மேல் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால், மேட்டூரில் இருந்து இன்னும் 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டு இருக்கும் சூழலில், தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டதால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். எனவே டெல்டா பாசன விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள தண்ணீரை இன்னும் 15 நாட்களுக்கு தமிழக அரசு கூடுதலாக திறந்துவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story