தண்ணீர் பீய்ச்ச திரவியங்கள், வேதிப்பொருள் கலக்கக்கூடாது: கள்ளழகருக்கு சுத்தமான நீரையே பயன்படுத்த வேண்டும்- பக்தர்களுக்கு வேண்டுகோள்


தண்ணீர் பீய்ச்ச திரவியங்கள், வேதிப்பொருள் கலக்கக்கூடாது: கள்ளழகருக்கு சுத்தமான நீரையே பயன்படுத்த வேண்டும்- பக்தர்களுக்கு வேண்டுகோள்
x

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச சுத்தமான நீரையே பயன்படுத்த வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மதுரை


கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச சுத்தமான நீரையே பயன்படுத்த வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

சித்திரை திருவிழா

அழகர்கோவில் இணை கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது. 3-ந் தேதியன்று மாலை 6 மணியில் இருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வருகிறார்.

இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 5-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் விரதம் இருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

தண்ணீர் பீய்ச்சும் போது..

கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி, செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களை கலந்து பீய்ச்சுவதால் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்களும், பக்தர்கள், பட்டர்கள், பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை சுவாமியின் மீது பீய்ச்சுகின்றனர்.

இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின்போது பக்தர்கள் அதிக விசை உடைய குழாயை தோல் பையில் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டாம். விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்சும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story