சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்


சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட கணியாம்பூண்டி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கடந்த பல ஆண்டுகளாக அங்குள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தின் வழியாக சென்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடத்தின் உரிமையாளர் அந்த இடத்தை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்லும் பாதை அடைபட்டு கணியாம்பூண்டி ஊராட்சி அலுவலகம் அருகே திருப்பூர்-கணியாம்பூண்டி சாலையில் கடந்த பல நாட்களாக சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கணியாம்பூண்டி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அந்த பகுதியில் சாலையில் தேங்கி உள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story