காவிரி குடிநீர் வினியோகம் 2 நாள் நிறுத்தம்


காவிரி குடிநீர் வினியோகம் 2 நாள் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி குடிநீர் வினியோகம் 2 நாள் நிறுத்தம் செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட தலைமையிடத்தில் பராமரிப்பு பணிக்காக மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகே கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்காக கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேசுவரம் நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், நயினார்கோவில், போகலூர் யூனியன்களுக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story