சாத்தான்குளம் பகுதியில் தண்ணீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
சாத்தான்குளம் பகுதியில் தண்ணீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பகுதியில் மழை காலங்களிலும், மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீர் வரத்து கால்வாய் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. இதனால் ஆறுமுகனேரி குளத்துக்கும், செட்டிக்குளம், திருவரங்கனேரி, பள்ளங்கிணறு பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கலெக்டர் செந்தில்ராஜிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் பொதுப்பணித்துறை பொறியாளர் ரகுராமன், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் வருவாய்ஆய்வாளர் ஜெயா, கிராம நிர்வாக அலுவலர் கற்பகம் உள்ளிட்ட வருவாய்துறையினர் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மேலும் கால்வாய் சீராக தண்ணீர் வழிந்தோடும் வகையில் ஆழப்படுத்தி சீரமைக்கப்பட்டது. தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்த கால்வாயில் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பினை அகற்றியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.