தஞ்சையில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


தஞ்சையில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 July 2023 3:17 AM IST (Updated: 4 July 2023 4:16 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான கணபதிநகர் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் எலிசா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் பிரதான குழாய் புதிதாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதனால் வார்டு எண் 42 முதல் 51 வரையிலான வார்டுகளுக்கு நாளை (புதன்கிழமை) நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொண்டு சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story