தூத்துக்குடியில் வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம்


தூத்துக்குடியில் வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்புக்கார நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார்.


Next Story