நீர்வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள்


நீர்வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள்
x

நீர்வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள்

திருப்பூர்

தளி

உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். சாகுபடி பணிகளுக்கு கிணறு, ஆழ்குழாய் கிணறு, குளம், குட்டைகள், அணைகள் ஆதரமாக உள்ளன. பருவமழை மற்றும் புயல் தீவிரம் அடையும்போது நீர்வரத்தை பெற்று வருகிறது. ஊருக்கு அருகாமை மற்றும் குளத்தின் கரைகளுக்கு அருகில் உள்ள நீர் வழித்தடங்களில் நீரை தேக்கி வைக்கும் வகையில் ஆங்காங்கே தொட்டிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் நிலத்தடி நீர் இருப்பு கூடுதலாக உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

உடுமலை கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு இந்த பணி நடைபெற்று வருகிறது. நீர்வழித்தடங்களில் ஆங்காங்கே குறிப்பிட்ட இடைவெளியில் சிறுசிறு தொட்டிகள் போன்று அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படும் போது அதில் தண்ணீர் தேங்கக் கூடிய சூழல் உருவாகி உள்ளது. ஆனால் அந்த தொட்டிகளை இன்னும் அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். இதனால் மழைக் காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை அதிக அளவில் தேக்குவதற்கு இயலும். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீர் வழித்தடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை முறையாக ஆய்வு செய்ய முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story