காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு


காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு
x
திருப்பூர்


காங்கயம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய் உடைப்பு

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 1,790 கிராமங்களுக்கும் 6 பேரூராட்சிகளுக்கு 3 நகராட்சிகளுக்கும் நீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊதியூர் செல்லும் பிரதான காவிரி கூட்டு குடிநீர் குழாயில் காங்கயம்-தாராபுரம் செல்லும் வழியில் வட்டமலை அருகில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. .

இந்த குடிநீர் குழாய் உடைப்பால் கடந்த 3 நாட்களாக ருத்ராவதி பேரூராட்சி மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 24 ஊராட்சிகளில் உள்ள 350 கிராமங்களில் குடிநீர் வினியோகம் தடைபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சீரமைக்க கோரிக்கை

மேலும் உடைந்த குழாயை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து நேற்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி, மற்றும் காங்கயம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடைந்த குழாய் உடனடியாக நாளை சரி செய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைந்த குழாயை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---



Next Story