குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைப்பு
கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதனை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தூத்துகுடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், பேரவை செயலர் சிந்தாதுரை, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திலகவதி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story