மழையால் வீணாகி வரும் தர்பூசணி பழங்கள்


மழையால் வீணாகி வரும் தர்பூசணி பழங்கள்
x

மழையால் தர்பூசணி பழங்கள் வீணாகி வருகிறது.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் கோடைக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி பழங்களை ஒரு சில பழ வியாபாரிகள் வெளியூர் பகுதிகளில் இருந்து, இறக்குமதி செய்து கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வந்தனர். இந்தநிலையில், இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருவதால் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருவதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.


Next Story