வாட்ஸ்-அப் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்த தகவல்


வாட்ஸ்-அப் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்த தகவல்
x
திருப்பூர்


உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவப்பநாயக்கனூர் ரேஷன் கடையின் விற்பனையாளராக மாற்றுத்திறனாளி சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வழங்கப்பட உள்ள பொருட்கள் குறித்த தகவல் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் குருவப்ப நாயக்கனூர் ரேஷன் என்ற பெயரில் வாட்ஸ்-ஆப் குருப்பை நிறுவி உள்ளார். அதன் மூலமாக வார்டு வாரியாக பொருட்கள் வழங்கும் தகவல், என்னென்ன பொருட்கள் போடப்படுகிறது. கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார்.

இதனால் பொதுமக்களுக்கு எளிதில் தகவல் கிடைத்து விடுவதால் ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றுத்துடன் திரும்பி வர வேண்டிய அவசியம் எழவில்லை. இதன் காரணமாக முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கூலித்தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு காலநேர விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதே போன்று உடுமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வாட்ஸ்-ஆப் குருப்பை உருவாக்கி தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால் பொதுமக்களுக்கும் ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


Next Story