உடுமலை கச்சேரி வீதியை ஒருவழிப்பாதையாக்க திட்டம்


உடுமலை கச்சேரி வீதியை ஒருவழிப்பாதையாக்க திட்டம்
x
திருப்பூர்


உடுமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கச்சேரி வீதியை ஒரு வழிப்பாதையாக மாற்ற நகராட்சி திட்டம் வகுத்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை நகரப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. அந்தவகையில் தளி சாலை, கல்பனா சாலை, வஉசி வீதி, பொள்ளாச்சி சாலை, ராஜேந்திரா சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை உள்ளிட்ட சாலைகளில் தினசரி போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.

குறிப்பாக நீதிமன்றங்கள், தாலுகா அலுவலகம், தபால் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, கிளைச்சிறை உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ள கச்சேரி வீதியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை ஏற்உடுமலை கச்சேரி வீதியை ஒருவழிப்பாதையாக்க திட்டம்றிச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

ஒருவழிப்பாதை

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று கச்சேரி வீதியில் சாலை ஓரம் அமைந்திருந்த ஆக்கிரமிப்புகளை நகரமைப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் இணைந்து அகற்றினர். மேலும் சாலையின் ஒருபுறம் மட்டும் வாகனங்களை ஓரமாக நிறுத்தும் வகையில் சாய்தளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்றது. இதன் மூலம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவது தவிர்க்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து கச்சேரி வீதியை ஒருவழிப்பாதையாக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கச்சேரி வீதியின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன், அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இடையூறில்லாமல் செல்ல வழி ஏற்படும் என்பது பொதுமக்களுக்கு மகிச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.


Next Story