சேதமடைந்துள்ள வழிகாட்டி பலகை


சேதமடைந்துள்ள வழிகாட்டி பலகை
x

சேதமடைந்துள்ள வழிகாட்டி பலகை

திருப்பூர்

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள வழிக்காட்டி பலகை சில மாதங்களுக்கு முன்பு அந்த வழியாக சென்ற கனரக வாகனம் மோதி சேதமடைந்தது. இதன்காரணமாக தற்போது இந்த வழிக்காட்டி பலகை எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பகுதி வழியாக சென்று வருகின்றனர். அதிலும் புதியவர்கள் இந்த வழியாக வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை எளிதாக கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருந்து வந்த வழிக்காட்டி பலகை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எந்த வழியாக செல்ல வேண்டும் என்று தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த வழிக்காட்டி பலகையை சரிசெய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story