வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது


வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார் கோவில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பங்கிராஜ். இவர் காரைக்குடியில் இருந்து ரூ.9 லட்சத்துடன் காளையார்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது காளக்கண்மாய் அருகே மோட்டார்சைக்கிளில் வந்த 2 நபர்கள் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி ரூ.9 லட்சத்தை பறித்துசென்றனர். இது குறித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் வழிப்பறியில் ஈடுபட்டது இளையான்குடி அருகே மேலாயூர் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 32), காளையார்கோவில் ரோஜா நகரை சேர்ந்த ஜெயக்குமார் (42), கமுதி அருகே எருமைக்குளம் கிராமத்தை சேர்ந்த வழி விட்டான் (35), அவரது தந்தை நாகராஜ் (55) என்பது தெரியவந்தது. அதில், நாகராஜ் மற்றும் ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வழி விட்டான், ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story