நாம் தமிழர் கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம்


நாம் தமிழர் கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் இருந்து கோழிக்கோடு, மலப்புரத்துக்கு சாலைகள் செல்கிறது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள், சரக்கு லாரிகள், பஸ்கள் சென்று வருகின்றன. இதுதவிர கூடலூர், பந்தலூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ வசதிக்காக தினமும் கேரளா சென்று திரும்புகின்றனர். இதற்கிடையே சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கூடலூர்-கேரள சாலையை சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில், பிச்சை எடுக்கும் போராட்டம் கூடலூர் காந்தி சிலை முன்பு நடைபெற்றது. தரையில் துணியை விரித்து ஒரு தட்டில் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் கட்சியினர் ஈடுபட்டனர். போராட்டத்தில் சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் கேதீஸ்வரன், பொன் மோகன் தாஸ், டேனி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story