நாம் தமிழர் கட்சி கூட்டம்
சிவகிரியில் நாம் தமிழர் கட்சி கூட்டம் நடந்தது.
தென்காசி
சிவகிரி:
சிவகிரி வட்டார பகுதிகளில் கனிம வளங்கள் கொள்ளை நடைபெறுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரியில் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.
வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் சங்கர் கணேசன், சிவகிரி நகர தலைவர் குட்டி என்ற ஆறுமுகம், சிவகிரி நகரச் செயலாளர் ராஜதுரை ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட தலைவர் கற்பகராஜ், வாசுதேவநல்லூர் தொகுதி செயலாளர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story