நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம் - திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம் என்று திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் தெரிவித்தார்.
நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம் என்று திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தி.மு.க. அமைச்சர்கள்
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை செல்வதற்காக கார் மூலம் திருச்சிக்கு நேற்று வருகை தந்தார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செந்தில் பாலாஜி கைதுக்கு பின் தி.மு.க. அமைச்சர்கள் பயந்து போய் உள்ளார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார், நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அப்படித்தான் பேசுவார். யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்கு தெரியும். அ.தி.மு.க. தான் பா.ஜனதாவுக்கு அடிமையாக இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும்.
நடவடிக்கை எடுப்பார்
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான காவிரி நீரை பெற்று தர தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரில் இருந்து சரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழக கவர்னருக்கு வேறு எந்த வேலையும் இல்லை. அதனால் தான் அவர் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் மதியம் 2.40 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.