வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கட்சி நிர்வாகிகள் கல்லத்தியான், மணப்படை வீடு மணி, வரலாற்று ஆய்வாளர் திவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட அவைத்தலைவர் பாஸ்கர் சகாயம் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story