நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தேரடி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட பா.ஜனதா நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அருண் சங்கர் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கற்பகராஜ், செயலாளர் ராஜா சிங், சங்கரன்கோவில் நகர செயலாளர் அந்தோணி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story