நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு
நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தமிழ்மொழி வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை தமிழுக்காக 1965-ம் ஆண்டு மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த நாளான செப்டம்பர் 3-ந் தேதி நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருந்தார். அதன்அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தேவாரம், திருவாசகம் பாடி தமிழ்வழி அந்தணர்களால் வழிபாடு நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் அழகப்பன், தொகுதி தலைவர் சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.