காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 9:04 AM GMT (Updated: 5 July 2023 9:11 AM GMT)

மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது' எனவும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிடவும் மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் வலியுறுத்திய கூறப்படுகிறது.

கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

"தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 9 டிஎம்சி தண்ணீரை வழங்கவில்லை. மாத வாரியாக தமிழ்நாட்டிற்கான தண்ணீரை வழங்க, கர்நாடக அரசை அறிவுறுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கமாட்டோம். மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம். தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது" என்று கூறினார்.


Next Story