தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு


தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு
x

தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாநகரில் இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் உயிர்பலிகளில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களே அதிகம் இறந்துள்ளனர். குறிப்பாக மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் இறப்பு நிகழ்ந்துள்ளது. இதை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் காவல்துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த பெண்கள், இளைஞர்கள், ஆண்களை நிறுத்தி அவர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், தலைக்கவசம் அணியாததால் மாநகரில் ஏற்பட்ட உயிரிழப்பு விவரங்களையும் இன்ஸ்பெக்டர் எடுத்துக்கூறினார். இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது தலையில் தலைக்கவசம் இருப்பதை உறுதி செய்து வண்டியை இயக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தலைக்கவசம் அணியும் முறையையும் செயல்முறை விளக்கம் அளித்தார்.



Next Story