Normal
மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து நெசவுதொழிலாளி தற்கொலை
மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து நெசவுதொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி சேடர் தெருவை சேர்ந்தவர் யோகானந்தன் (வயது 56), நெசவு தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடல் இறக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இவருக்கு வயிற்றுவலி அதிகமான காரணத்தால் கடந்த 18-ந் தேதி மதுவுடன் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி யோகானந்தன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story