தங்கும் விடுதியில் நெசவு தொழிலாளி தற்கொலை


தங்கும் விடுதியில் நெசவு தொழிலாளி தற்கொலை
x

தங்கும் விடுதியில் நெசவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

தங்கும் விடுதியில் நெசவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). நெசவு தொழிலாளி. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கருமாரியம்மன் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அந்த அறையில் ராஜேந்திரன் தூக்கில் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்த ராஜேந்திரனுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story