தாரமங்கலம் அருகே சரபங்கா ஆற்றில் நெசவு தொழிலாளி பிணம்


தாரமங்கலம் அருகே சரபங்கா ஆற்றில் நெசவு தொழிலாளி பிணம்
x

தாரமங்கலம் அருகே சரபங்கா ஆற்றில் நெசவு தொழிலாளி பிணம் மிதந்தது.

சேலம்

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் சோலவண்டியான் வளவு பகுதியில் ஓடும் சரபங்கா ஆற்றில் ஆண் பிணம் மிதப்பதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக மிதந்தவர் இடங்கணசாலை அருகே உள்ள பாப்பாப்பட்டியை சேர்ந்த சங்கர் (வயது 45), நெசவு தொழிலாளி என்பது தெரியவந்தது, மேலும் குடிப்பழக்கம் உள்ள சங்கர் அடிக்கடி கருத்தானூரில் உள்ள தனது தந்தையை பார்க்க செல்வது வழக்கம். அதன்படி கடந்த 21-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் நேற்று சரப்பங்கா நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story