மேலூர் அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா


மேலூர் அருகே  களைகட்டிய மீன்பிடி திருவிழா
x

மேலூர் அருகே கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அப்போது போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.

மதுரை

மேலூர்

மேலூர் அருகே கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அப்போது போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.

மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாணிபட்டி கிராமத்தில் உள்ள மலையப்பன் கண்மாயில் மழைக்காலத்தில் பெருகும் தண்ணீரில் வளரும் மீன்களை யாரும் பிடிக்காமல் ஊர் கட்டுப்பாட்டுடன் கிராம மக்கள் பாதுகாத்து வந்தனர். அவ்வாறு வளர்ந்த மீன்களை நெல் விவசாயம் பணிகள் முடிந்தவுடன் தண்ணீர் ஓரளவு வற்றியவுடன் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

அதிகாலை கிராம பெரியவர்கள் பாரம்பரிய முறைப்படி சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெள்ளை வீசி மீன்களை பிடிக்கலாம் என்று தெரிவித்தனர்.

போட்டி போட்டு பிடித்தனர்

அப்போது கண்மாய் கரையில் வலை, கச்சா உள்ளிட்ட மீன் பிடி வலைகளுடன் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு உற்சாகமாக தண்ணீரில் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர். அப்போது நாட்டு வகை மீன்களான கட்லா, ஜிலேபி, விரால், குரவை உள்ளிட்ட மீன்கள் அகப்பட்டன. அதனை போட்டி போட்டு பிடித்து சென்றனர். அனைவருக்கும் ஓரளவு மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

பின்பு இங்கு பிடிபட்ட மீன்களை விற்பனை செய்யாமல் தங்களை வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து பின்னர் குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் கிராமங்களில் மீன் சமையல் கம கம வாசனை பரவியது. ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


Next Story