களைகட்டிய கால்நடை சந்தை


களைகட்டிய கால்நடை சந்தை
x

ஒட்டன்சத்திரத்தில் கால்நடை சந்தை களை கட்டியது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் திங்கட்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் கால்நடை சந்தை, தென் தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த சந்தைக்கு கரூர், காங்கயம், தேனி, பழனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதேபோல் மாடுகளை வாங்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும், விவசாயிகளும் வருவார்கள். இந்தநிலையில் நேற்று ஒட்டன்சத்தில் கால்நடை சந்தை நடைபெற்றது. இதில், ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல் மாடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகளும் வந்திருந்தனர். இதனால் கால்நடை சந்தை களைகட்டியது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் விவசாயிகள், வியாபாரிகள் வந்தனர். அதேபோல் மாடுகள் விற்பனையும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story