திருமணம் நின்றதால் தீக்குளித்து பெண் தற்கொலை
நிச்சயதாா்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றதால் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கபிஸ்தலம்;
நிச்சயதாா்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றதால் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருமணம் நின்றது
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தேவன்குடி சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருைடய மகள் சோபனா(வயது 22).பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள சோபனாவுக்கும், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணம் ஏதோ காரணத்தால் நின்றது.
தீக்குளித்து தற்கொலை
இதனால் மனமுடைந்த சோபனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி படுகாயமடைந்த சோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இது குறித்து சோபனாவின் தந்தை ராஜா, கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நிச்சயதாா்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றதால் தீக்குளித்து பெண் தற்கொலை செய்த சம்பவம் கபிஸ்தலம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.