உசிலம்பட்டி அருகே களைகட்டிய கிடாய் முட்டு போட்டி


உசிலம்பட்டி அருகே  களைகட்டிய கிடாய் முட்டு போட்டி
x

உசிலம்பட்டி அருகே கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது. இதை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது. இதை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

கிடாய் முட்டு போட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து-கல்லூத்து உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள்-தோப்பு கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60 ஜோடி கிடாய்கள் கலந்து கொண்டன.

கிடாய் முட்டு போட்டியில் கலந்து கொண்ட கிடாய்கள் பல்வரிசை மற்றும் அந்தக் கிடாயின் வயதில் அடிப்படையில் மோத விடப்பட்டன.

பரிசுகள்

அப்படி மோத விடப்பட்ட கிடாய்கள் ஆக்ரோஷமாக முட்டி மோதி விளையாடின. இதனால் போட்டி களைகட்டியது. இதில் அதிகப்படியாக 60 முறை நேருக்கு நேர் முட்டும் கிடாய்க்களுக்கு சிறப்பு பரிசும், போட்டியில் கலந்து கொள்ளும் கிடாய்க்களுக்கு பித்தளை அண்டா பரிசாகவும் விழா கமிட்டியினரால் வழங்கப்பட்டது.

இந்த போட்டியை பார்க்க மதுரை, தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தினர். அவர்கள் 2 கிடாய்க்களும் முட்டி கொள்ளும்போது உற்சாகத்துடன் கைகளை தட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர். வெற்றி பெற்ற கிடாய் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story