வெள்ளகோவிலில் ஆட்டுச்சந்தை


வெள்ளகோவிலில் ஆட்டுச்சந்தை
x
திருப்பூர்


வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சியில் உள்ள மயில்ரங்கத்தில் வாரச்சந்தை பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. தற்போது இந்த வாரச்சந்தை மேம்பாடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. இந்த சந்தை வியாழன்தோறும் செயல்பட்டு வருகிறது. நேற்று தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆட்டுச்சந்தையை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன், வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன் உள்பட வருவாய்த்துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story