திருச்சி-ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்


திருச்சி-ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
x

திருச்சி-ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

திருச்சி

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி (வண்டி எண் 09419) ஆமதாபாத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரெயில் இயங்கவுள்ளது. இந்த ரெயில் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை தோறும்) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 24-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும். மறுமார்க்கமாக (வண்டி எண் 09420) திருச்சியில் இருந்து ஆமதாபாத்துக்கு வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை தோறும்) காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் 26-ந் தேதி இரவு 9.15 மணிக்கு ஆமதாபாத்தை சென்றடையும். இந்த ரெயில்கள் வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை மட்டுமே இயங்கும். இந்த ரெயில் திருச்சியில் இருந்து தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா, கடப்பா, மந்திராலயம், புனே, சூரத், வதோதரா வழியாக ஆமதாபாத்தை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story