முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
சேலம் மாவட்ட எல்லையான மல்லூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.
சேலம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மை குட்டை மேட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் சென்னை செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து கார் மூலம் சேலம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றார்.
அப்போது சேலம் மாவட்ட எல்லையான மல்லூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தனர். அவர்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட அவர் விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story