புதிய ரெயிலுக்கு செங்கோட்டையில் வரவேற்பு
சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த புதிய ரெயிலுக்கு செங்கோட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
செங்கோட்டை:
சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த புதிய ரெயிலுக்கு செங்கோட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
புதிய ரெயில்
சென்னை தாம்பரம் - தென்காசி மாவட்டம் செங்கோட்டை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 20683/20684) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ரெயில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, விருதுநகர், நெல்லை, சேரன்மாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக வரும் 16-ந் தேதி முதல் இயக்கப்படும் என்றும் தெற்கு ெரயில்வே அறிவித்தது.
மேலும் மே மாதம் 29-ந் தேதி வரை வாரம் ஒரு முறை இயக்கப்படும் எனவும், பின்னர் ஜூன் 1-ந் தேதி முதல் வாரம் மூன்று முறை இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்த ெரயில் சேவையை நேற்று முன்தினம் சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் நேற்று காலை செங்கோட்டை ெரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
புதிய ெரயிலை பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் முரளி, செயலாளர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் முரளி ஆகியோர் வரவேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர் ரெயிலை இயக்கி வந்த முதன்மை டிரைவர் மூர்த்தி, உதவி டிரைவர் காசிராஜன், ெரயில் கார்டு முருகன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.
இந்த சேவை தென் மாவட்ட ெரயில் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என ெரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பாவூர்சத்திரம்
இதற்கிடையே சென்னை தாம்பரம்-செங்கோட்டை ெரயில் பாவூர்சத்திரம் ெரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்தது. ரெயிலுக்கு பாவூர்சத்திரம் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. என்ஜின் டிரைவருக்கு சால்வை அணிவித்து மரக்கன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ெரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, பாவூர்சத்திரம் தொழிலதிபர் சேவியர் ராஜன், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், சமூக ஆர்வலர் தங்கராஜ், ஆசிரியர் கோபு மற்றும் ெரயில் பயணிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நீண்ட தூர ரெயில்
செங்கோட்டை -தாம்பரம் இடையே புதிதாக இயக்கப்படும் இந்த ரெயில் தமிழ்நாடு உள்ளேயே பயணிக்கும் நீண்ட தூர ரெயில்களின் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரெயில் 883 கிலோ மீட்டர் தூரமும், சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் ரெயில் 776 கிலோ மீட்டர் தூரமும் பயணிக்கிறது.
3-வது இடத்தில் உள்ள இந்த ரெயில் செங்கோட்டை -தாம்பரம் இடையே 765 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது.
தென் மாவட்டத்தில் இருந்து மதுரை மற்றும் திருச்சி வழியாக செல்லாமல் பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னை செல்லும் முதல் ரெயில் இதுவாகும்.
வாரம் 3 நாள்
இந்த ரெயில் வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் தாம்பரம் -செங்கோட்டைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளிலும், செங்கோட்டை -தாம்பரத்துக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.