மத்திய மந்திரிக்கு வரவேற்பு


மத்திய மந்திரிக்கு வரவேற்பு
x

தூத்துக்குடியில் மத்திய மந்திரிக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு கொடுத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைக்கரும், துறைமுக ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காகவும் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை இணைமந்திரி சாந்தனு தாக்கூர் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.


Next Story