வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு


வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக நியமனம் செய்யப்பட்ட வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்:

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தி.மு.க. உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பட்டியலை கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டது. அதில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கே.கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவரது ஆதரவாளர்களும் மாவட்ட நிர்வாகிகளாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து காரில் நேற்று மாலை 4.45 மணிக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வை வரவேற்றனர்.

தாரை தப்பட்டை முழங்க...

2 கிலோ மீட்டர் தொலைவுக்கு காத்திருந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்கவும், வானவேடிக்கை மற்றும் பட்டாசுகள் வெடித்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். திறந்த ஜீப்பில் நின்றபடி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்பை பெற்றுக்கொண்டார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான சுப்ராயலு, நகர துணை செயலாளர் அப்துல்ரசாக், கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், தொழிலதிபர் எஸ்.எம்.சர்புதீன், சின்னசேலம் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விசய் ஆனந்து, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.டி.முருகன், திருக்கோவிலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, திருக்கோவிலூர் ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார், ஒன்றியக்குழு துணை தலைவர் தனம்சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், மணலூர்பேட்டை நகர செயலாளர் ஜெயகணேஷ், பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வுபெற்ற முதன்மை மேலாளர் பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் அய்யனார், செல்விகோபி, காந்திமதி, ராஜேந்திரன், ராஜ்குமார், வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜி, தணிகாசலம், வக்கீல் பழனிவேல், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story