107 பேருக்கு ரூ.3.81 லட்சம் நலத்திட்ட உதவிகள்


107 பேருக்கு ரூ.3.81 லட்சம் நலத்திட்ட உதவிகள்
x

கிருஷ்ணகிரியில் நடந்த ஜமாபந்தியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் 107 பேருக்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.

கிருஷ்ணகிரி

ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் கடந்த 2-ந் தேதி முதல் நேற்று வரையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் தனிப்பட்டா உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 1,005 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். நேற்று ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தார்.

நலத்திட்ட உதவிகள்

இதில் 107 பேருக்குரூ.3 லட்சத்து 81 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார். இதில் பட்டா மாற்றம், உட்பிரிவு தனிப்பட்டா 53 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 25 பயனாளிகளுக்கும் நல உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் விஜயகுமார், நில அளவை உதவி இயக்குனர் சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story