நலத்திட்ட உதவிகள்


நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில், பா.ஜனதா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வல்லம் ரோட்டில் உள்ள சேனைத்தலைவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர தலைவா் வேம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், நகர பார்வையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா். நகர பொருளாளர் ராம்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர், கணவனை இழந்த வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு இலவச ஆடை, அரிசி அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.


Next Story