ரூ.73 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


ரூ.73 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை

காரைக்குடி,

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம்

கல்லல் ஒன்றியம் பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் இடங்களில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மருத்துவ முகாம்கள், கால்நடை முகாம்கள், வேளாண் பொருட்கள் சார்ந்த கண்காட்சிகள் உள்பட அரசின் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் முகாம் நடத்தப்படுகிறது.

இதையொட்டி இக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு அழகப்பா கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மூலம் பொதுமக்களின் தேவை மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இளைய தலைமுறையினர் அரசின் திட்டங்களையும், அதன் பயனையும் பொதுமக்கள் எவ்வாறு பெறுகின்றனர் என்பது குறித்து அறிந்துகொள்வதற்கு இது அடிப்படையாக அமைகிறது.

வாழ்வாதாரம்

இக்கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் இந்த முகாம் மூலம் விரிவாக எடுத்துரைத்தனர். பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இதுபோன்ற முகாம்களை பயன்படுத்தி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

முகாமில் மொத்தம் 144 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 85 ஆயிரத்து 450 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, தனித்துணை ஆட்சியர் காமாட்சி, இணை இயக்குனர்கள் தனபாலன், டாக்டர் ராகவன், கல்லல் யூனியன் தலைவர் சொர்ணம்அசோகன், துணைத்தலைவர் நாராயணன், கவுன்சிலர் பிரவீனா, ஊராட்சி தலைவர் திராவிடமணி, காரைக்குடி தாசில்தார் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story