தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
வல்லத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் வழங்கினார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மேற்கு ஒன்றியம் வல்லம் பகுதியில் அவரது புகைப்படங்கள் பொறித்த கல்வெட்டுடன் கூடிய 106-வது தி.மு.க. கொடியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து 145 பேருக்கு அரிசி பைகள் வழங்கினார். மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 45 பேருக்கு தலா ரூ.500 உதவித்தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஓணம் பீடி அதிபர் ஒய்.பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். தென்காசி யூனியன் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா, தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றியும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. செங்கோட்டை நகர செயலாளர் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, சேக்தாவூது, மாவட்ட பொருளாளர் செரீப், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தொ.மு.ச. மத்திய சங்க துணை செயலாளர் ரவீந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு, பேரறிஞா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னா் பல இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்தார். 245 பேருக்கு இலவச அரிசி பைகளை வழங்கினார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.ரஹீம், தமிழ்செல்வி, மீனவரணி அமைப்பாளர் ஜபருல்லாகான், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் மு.ஆபத்துக்காத்தான், பொருளாளர் தில்லை நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளா் ஆ.சண்முகராஜா நன்றி கூறினார்.