பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் வழங்கினார்
குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 312 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், வருவாய்த்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியும் 3 பேருக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவையும் கலெக்டர் வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்.மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கோவிந்தன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.