ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
ராமநாதபுரம்
முதுகுளத்தூர், ஏப், 22-
முதுகுளத்தூரில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நகர தலைவர் சேர்த்து ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் கலந்து கொண்டு பித்ரா உணவுப்பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் செயலாளர் சகாபுதீன், சுற்றுச்சூழல் மாவட்ட செயலாளர் முகமது யாக்கப், மருத்துவ அணி செயலாளர் ராஜா, ஊடக அணி செயலாளர் தமீம் அகமது, நகரச் செயலாளர் முகமது அலி, த.மு.மு.க. செயலாளர் அப்துல் ரகுமான், நகர துணை செயலாளர் முகமது காசிம், சாகுல் ஹமீது உள்பட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story